Home செய்திகள் மதுரையில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரையில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டங்களுக்கு எதிராக சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

by mohan

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு (EIA-2020), குற்றவியல் சட்டங்களில் அவசரகதியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் 31வரை பிரச்சார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது.அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை மாலை மதுரை தெற்குவாசல் சின்னக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எஸ்.டி.டி.யூ மாநில செயலாளர் அப்துல் சிக்கந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது கண்டன கோஷங்கள் எழுப்பினார்…எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத்தலைவர் அபுதாஹீர்,கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா மதுரை மாவட்ட தலைவர் இப்ராஹிம், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாவட்ட தலைவர் அப்துல்லா ஷாதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.-கண்டன உரை-பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துணை தலைவர் ஹாலித் முஹம்மது,எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மத்திய தொகுதி தலைவர் ஆரிப் கான் நன்றியுரை நிகழ்த்தினார்.சமூக இடைவெளியுடன் ஏராளமானோர்கள் பங்கேற்றனர் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!