உசிலம்பட்டி-பாசம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிக்கும் சம்பவம்.. கிணற்றில் விழுந்த பசு மாட்டைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த 2 பெண்கள்.3பேரையும் மீட்ட தீயணைப்புத் துறை

உசிலம்பட்டி அருகே 70 அடி கிணற்றில் விழுந்த பசு மாட்டைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த 2 பெண்கள்.3பேரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.பாசம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதை நிரூபிக்கும் சம்பவம் உசிலம்பட்டி அருகே நடைபெற்றுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்படடி அருகே மேக்கிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி.விவசாயி.இவர் மனைவி புவனேஷ்வரி(39).இவரும் வீட்டின் அருகில் வசிக்கும் சுதாவும் அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்றவர்கள் கிணற்றின் அருகில் மாட்டை மேய்ச்சலுக்காக கட்டி வைத்து விட்டு தோட்ட வேலை பார்த்துள்ளனர்.அப்பொழுது எதிர்பாராத விதமாக பசுமாடு கிணற்றுக்குள் விழுந்தது.

இதனைப்பார்த்த புவனேஷ்வரி பசுவைக் காப்பாற்ற கிணற்றுக்குள் தாவ சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.சம்பவமறிந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினர் அதிகாரி குணசேகரன் தலைமையில் சென்று கிணற்றில் இறங்கி முதலில் இரு பெண்களையும் கயிறு கட்டி தூக்கினர்.பின் பசுமாட்டையும் 70அடி ஆழ கிணற்றிலிருந்து (தண்ணீர் உண்டு) மீட்டனர்.தான் பாசமாக வளர்த்த பசுமாடு கிணற்றில் விழுந்ததைக் கேட்டதும் சற்று யோசிக்காமல் கிணற்றில் குதித்த புவனேஷ்வரி அவர் குதித்ததைக் கண்ட அவருடைய நண்பருமான சுதாவும் குதித்த சம்பவம் மனிதன் என்றாலும் மிருகம் என்றாலும் அதன் மேல் வைத்துள்ள பாசம் ஒன்றுதான் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இச்சம்பவம் உள்ளது.துரிதமாய் வந்து மூவரையும் காப்பாற்றிய தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..