சீர்காழி அருகே கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பழைய மீன்பிடி துறைமுகத்திற்கு சீல் வைப்பு. மீன் பிடிக்க தடை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் கிராமத்தில் மீனவப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி சிகிச்சை பெற்று வருகிறார் இதனையடுத்து கொடியம்பாளையம் கிராமத்தில் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு சீல் வைத்துள்ளனர் .மேலும் கொடியம்பாளையம் கிராமத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பழையார் துறைமுகத்தின் மூலமாக தான் படகில் செல்வேண்டும் தற்போது படகு போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது மேலும் கொடியம்பாளையத்தின் பக்கத்து கிராமமான பழையாரில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் இதனால் பழையார் கிராமத்தில் உள்ள சுமார் 700 விசைப்படகுகளும் 1,000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது இந்த துறைமுகத்தை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பின்றி வீட்டில் முடங்கி உள்ளனர்