திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடாக சர்ஜிக்கல் ஸ்பிரிட் விற்பனை செய்த 11 மருந்தகங்களுக்கு சீல் மாவட்ட ஆட்சியர் தகவல்..

திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடாக சர்ஜிக்கல் ஸ்பிரிட் விற்பனை செய்த 11 மருந்தகங்களுக்கு சீல் மாவட்ட ஆட்சியர் தகவல்..

ஊரடங்கு உத்தரவு காலங்களில் அத்யாவசிய பொருட்களான காய்கறி,மளிகை மற்றும் மருந்தகங்களுக்கு சில தளர்வுகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் முறைகேடாக மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் புகார் பெறப்பட்டதின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மருந்தகங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட மருந்தக ஆய்வாளர்கள் திண்டுக்கல், பழனி,செம்பட்டி,வேடசந்தூர் ஆகிய மருந்தகங்களில் ஆய்வுசெய்தனர். இதில் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்தல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து விற்பனை செய்தல் முறைகேடாக சர்ஜ்சிகல் ஸ்பிரிட் விற்பனை செய்தல் ஆகியவை கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பழனி பகுதியில் உள்ள 7 மருந்தகங்கள், செம்பட்டியில் 2 மருந்தகங்கள், வேடசந்தூர் 1 மருந்தகம் , திண்டுக்கல் 1 ஒரு மருந்தகம் என 11 மருந்தகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அதன் விற்பனை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக செய்திகுறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல், பக்ருதீன்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..