சேய்தி எதிரொலி.ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077.மதுரை ஆட்சியர் அறிவிப்பு.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்லாது தமிழகத்தையும் விட்டு வைக்க வில்லை, இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில் கொரோனா தொற்றை காரணம் காட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு மருத்துவமணையில் பிரசவத்திற்கு வரும் பெண்களை அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்தது.அவ்வாறு அனுமதிக்காததால் தாமதமாக மதுரை அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்ட செட்டியபட்டியைச் சேர்ந்த தீபிகா பொட்லுப்பட்டியைச் சேர்ந்த பாண்டி மீனா ஆகிய கர்ப்பிணிப்பெண்களின் குழந்தைகள் வயிற்றிலேயே இறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இதுகுறித்து நமது நாளிதழிலில் கர்ப்பிணிப் பெண்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்காதது குறித்து விரிவாக செய்தி வெளியாகி இருந்தது.இது குறித்து உசிலம்பட்டி கோட்டாச்சியா் ராஜ்குமாா் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவா் மதுரை மாவட்ட ஆட்சியா் வினயிடம் கவனத்திற்கு கொண்டு சென்றாா்.

இதன் எதிரொலியாக கொரோனா வைரஸ் தொற்று சமயத்தில் மதுரை மாவட்டத்திலுள்ள கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக தொடர்பு கொள்ள 1077 என்ற கட்டணமில்லா எண்ணை மதுரை ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.இது 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண்ணாகும்.நமது செய்தியின் எதிரொலியாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தின் போது விடிவுகாலம் ஏற்ப்பட்டுள்ளது.இதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சிகிச்சையின்றி அவதிப்படும் கர்ப்பிணிப்பெண்களுக்கு உதவ 24 நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..