சிவகாசியில் ஓட்டுநர்களுக்கு த அரிசி வழங்கும் நிகழ்ச்சி..அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கிவைத்தார்…

சிவகாசி மற்றும் திருத்தங்கல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்கள் அதன் உதவியாளர்கள் என ஆயிரம் நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது

கொரானா வைரஸ் தாக்குதலிலிருந்து நாட்டு மக்கள் மீட்கப்பட்டனர் என்ற செய்தி வரும் வரை இது போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்திக் கொண்டே இருப்போம் என்றார்.

இந்திய ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கி போருக்கு தயாராவதை விட சுகாதாரத்திற்கு மத்திய அரசு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மைய கட்சித்தலைவர் கமலஹாசன் கூறிய கருத்திற்கு பதிலளித்த அமைச்சர்…

நாட்டில் கொரானா வைரஸ் மக்களை தாக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை அமெரிக்கா ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்திய ராணுவத்தின் பலம் அதிகமாய் இருந்து ஒரு வல்லரசு நாடாக உள்ளது கொரானா வைரஸ் தாக்குதலிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க சுகாதாரத்துறை மூலம் அரசுகள் எடுத்து வரும் தீவிரமான நடவடிக்கை மனிதாபிமான முறையில் உள்ளது.

டெல்லி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக தவித்து வரும் தமிழர்களை மீட்க அந்தந்த மாநில முதல்வர்கள் இடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது

ஊரடங்குபோது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள இந்நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு…

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையை கூட்டி அதிகாரிகளுடன் கலந்து பேசி மக்கள் திடீரென விளைவுகளை சந்திக்காத அளவுக்கு முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..