Home செய்திகள் அரசிடம் நிவாரணம் கோரும் இலங்கை அகதிகள்

அரசிடம் நிவாரணம் கோரும் இலங்கை அகதிகள்

by mohan

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 466 குடும்பங்கள் உள்ளன. இதில் 592 பெண்கள், 629 ஆண்கள், 136 ஆண் குழந்தைகள், 133 பெண் குழந்தைகள் என 1,490 பேர் தங்கி உள்ளனர். இவர்களில் பெரியவர்களுக்கு மாதம் ரூ.1,200, சிறியவர்களுக்கு மாதம் ரூ.900 வீதம் அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் அன்றாட வாழ்க்கையை நகர்த்த இயலாததால், கூலி வேலை செய்து போதிய வருவாய் ஈட்டுகின்றனர். இந்நிலையில், கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு மார்ச் 25 ஆம் தேதி முதல் நீடிப்பதால், அகதிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. ஊரடங்கு கால கட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசியல் கட்சியினர் வழங்கி வருகின்றனர். மேலும், மார்ச் 21ல் அகதிகள் முகாமில் நடந்த திருமணத்திற்கு வந்து ஊரடங்கு உத்தரவையடுத்துபொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சொந்த முகாம் திரும்ப இயலாத திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம், நெல்லை முகாமைச் சேர்ந்த 5 பெண் உள்பட 15 அகதிகளுக்கு ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அரிசி, காய்கறிகள், போர்வைகள், முகக்கவசம், சானிடைசர் ஆகியன வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் மிகவும் தங்கியோருக்கு மண்டபம் முகாம் அரவிந்த் கம்யூனிகேஷன் சார்பில் சை. சரவணன் ரூ.40 ஆயிரம் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கினார். முகாமிற்கு வெளியே நிவாரணப் பொருட்கள் வழங்கும் அரசியல் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட அகதிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், சரிவர உணவு கிடைக்காமல் பரிதவிக்கும் அகதிகள் தாங்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என கதறி வருகின்றனர். தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என மண்டபம் முகாமைச் சேர்ந்த மதிவதணன் தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!