தென் தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை வாகனம் அறிமுகம்..

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பெயரில் தென் தமிழகத்தில் முதல்முறையாக தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா மாதிரி சேகரிப்பு மையம் மதுரையில் இன்று (29/04/2020) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கிராமப்புற பகுதிகளில் இந்த சேவையானது நடைபெற உள்ளது. இதில் தொற்று உள்ளவர்களை கண்டறிவதற்கான மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு உட்படுத்த உதவும் இந்த சேவை.

இந்த சேவையானது கிராமப்புறங்களில் முழுமையாக செயல்படும். மேலும் இதன் மூலம் ஒவ்வொரு கிராமமாக சென்று  யாருக்கேனும் தொற்று உள்ளதா என சரிபார்க்க இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு மருத்துவர், மருந்து ஆய்வாளர் ஒருவர் உடன் இருப்பார்.

இது தென் தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியில் மதுரை நேதாஜி ஆம்புலன்ஸ் டிரஸ்ட் மற்றும் ஜெயின் சங்கமும் இணைந்து கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு சுமார் 100லிருந்து இருநூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பப்படும் என நேதாஜி ஆம்புலன்ஸ் டிரஸ்ட் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..