Home செய்திகள் கொரோனா வைரஸ் பீதி:-கோழி இறைச்சி, முட்டை உணவை உண்டு அச்சம் போக்கிய தெலங்கானா அமைச்சர்கள்.!

கொரோனா வைரஸ் பீதி:-கோழி இறைச்சி, முட்டை உணவை உண்டு அச்சம் போக்கிய தெலங்கானா அமைச்சர்கள்.!

by Askar

கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவாது என்பதை மெய்ப்பிக்கத் தெலங்கானா அமைச்சர்கள் இறைச்சி உணவைச் சாப்பிட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாகி வருகிறது. இந்நிலையில், கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்பதால் கொரோனா தாக்கும் என வதந்தி பரவியது. கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்பதால் கொரோனா வராது எனத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, தேசிய பிராய்லர் கவுன்சில் ஆகியவை ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளன.

இந்நிலையில் இதை மெய்ப்பித்துப் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், ஐதராபாத்தில் தெலங்கானா அமைச்சர்கள் ராமராவ், ராஜேந்தர், தலசானி சீனிவாஸ் உள்ளிட்டோர் பொது இடத்தில் நடந்த விருந்தில் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றால் சமைத்த உணவுகளைச் சாப்பிட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!