அரசு ஊழியர்களின் அலட்சியத்தால் 50 ஆயிரம் குழந்தைகளின் கல்விக் கனவு பறிப்பு

RTE இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். RTE சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த வேண்டாம்.நடப்பாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் தொடங்கி மே 18 – ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்த சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை தமிழக பள்ளிக்கல்வித் துறைஅறிவித்ததன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 1.21 லட்சம் இடங்களை நிரப்புவதற்கு 1.07 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் (பத்திரிக்கை செய்தி)இந்த நிலையில் RTE இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் நிறைய குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.

புகார்களை நிவர்த்தி செய்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரகத்தால் 14417 என்ற இலவச தொலைபேசி என்னும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிவித்திருந்தது.நாம் வெல்ஃபேர் கட்சியின் சார்பாக RTE கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு மாதகாலம் முகாம்களை நடத்தி அதன்மூலம் பல மனுக்களை பெற்று இருந்தோம்., அரசின் இணையதளம் சரியாக இயங்காததால் பல குழந்தைகளின் விண்ணப்பங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இணையதள பிரச்சனையை சரி செய்வதற்காக பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த 14417 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் அதுவும் இயங்கவில்லை,   [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கும் பதில் இல்லை., பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த கால அவகாசம் நிறைவு பெற்றது, பள்ளிகளும் திறந்தன. RTE சட்டத்தில் விண்ணப்பிக்க இயலாத பல தாய்மார்கள் தங்கள் தாலியை கூட அடகு வைத்து தனது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளனர்.டிஜிட்டல் இந்தியாவில் பள்ளிக்கல்வி துறையின் இணையதளம் இவ்வளவு படுமோசமாக செயல்படுவதை தமிழக மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் இரண்டு கேள்விகளை முன் வைத்தோம் .

1.பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு 18.4.19 முதல் 18.5.19 வரையிலான காலகட்டத்தில் எத்தனை அழைப்புகள் வந்தன., அதற்கு தந்த பதில்கள், கால் ஹிஸ்டரி குறித்த தகவலை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது .

[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.4.19 முதல் 18.5.19 வரையிலான காலகட்டத்தில் எத்தனை மின்னஞ்சல் வந்தன அதற்கு என்ன பதில் வழங்கப்பட்டது என்ற விவரத்தைக் கேட்டிருந்தோம்.

நமது RTI மனுவிற்கு பதிலளித்த பொது தகவல் அலுவலர் முதல் கேள்விக்கான பதிலை பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் பெற்றுக்கொள்ளும் படியும், இரண்டாவது கேள்விக்கு 1687 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும் அதற்கு தொலைபேசி வாயிலாக பதில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.தொலைபேசியில் தொடர்பு கொண்டாலே பதிலளிக்காது அரசு ஊழியர்கள் மின்னஞ்சலுக்கு தொலைபேசியில் பதிலளித்தார்களா….??? என்று ஆச்சரியத்துடன் மீண்டும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2J வின் கீழ் அந்த 1687 மின்னஞ்சல்களையும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் கணினியில் ஆய்வு செய்ய வேண்டி விண்ணப்பித்து இருந்தோம்.நமது விண்ணப்பத்தை ஏற்று கொண்ட பொது தகவல் அலுவலர் கடந்த 23.7.2019 அன்று காலை 11 மணிக்கு மாநில திட்ட இயக்குனரகம், இரண்டாவது தளம், அறை எண் 204க்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆய்வின் துவக்கமாக 1687 மின்னஞ்சல்களையும் நமக்கு ஃபார்வர்ட் செய்துகொண்டு அதில் 100 மின்னஞ்சல்களை பிரின்ட் எடுத்து ஆய்வு செய்தால் அதில் பல மின்னஞ்சல்களுக்கு தொலைபேசி எண்னே இல்லை.தொலைபேசி எண் இல்லாதவர்களுக்கு எப்படி சார் தொலைபேசியில் பதில் அளித்திர்கள் என்று கேள்வி எழுப்பியவுடன், தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த அந்த அரசு ஊழியர் தனது உதவிக்கு டெக்னிகல் டீமிலிருந்து ஒருவரை அழைத்துக் கொண்டார் வந்தவர் “ரொம்ப நல்லவரா இருந்ததனால்” இணைய பிரச்சனையை ஓரிரு நாட்களில் சரி செய்து விட்டோம் முழுமையாக கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று கூறி தன்னுடைய மடிக்கணினியை திறந்து காட்டினார்.வாலண்டியராக வந்து ஒருவர் வண்டியில் ஏறுகிறாரே என்ற சந்தேகத்துடன் அவரின் மடிக்கணினியை பார்க்கும் போதுதான் நமக்கு கிடைத்தது அந்த அதிர்ச்சித் தகவல் 1.21 லட்சம் இடங்களில் LKG-ல் 66,839 இடங்களும். முதல் வகுப்பில் 1460 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதை காட்டியது மடிக்கணினி.மக்களில் வரிப்பணத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு பணி நேரங்களில் பணி செய்யாமல் எந்த உணவகத்தில் எந்த தாலி நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கக் கூடிய அரசு ஊழியர்களால் ஏற்பட்ட இழப்பு 50 ஆயிரம் குழந்தைகளுக்கு கிடைத்திருக்க வேண்டிய இலவச கல்வி கிடைக்காமல் போனது .

நடந்த இந்த குற்றத்திற்க்கு பொறுப்பாளரான நிர்வாக அலுவலர் ரங்கநாதனை சந்தித்து ஏன் சார் இப்படி பொய் சொல்றீங்க என்று கேட்டதற்கு ஒரு நிமிடம் கூட நின்று நமக்கு பதில் தர முடியாமல் உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டார் ரங்கநாதன்.தாங்கள் என்ன தவறு செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்கின்ற மன தைரியத்தில் இருக்கும் இத்தகைய அரசு ஊழியர்களை தொடர்ந்து கேள்விகேட்க…! பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க…! போராட்டத்தை முன்னெடுக்க…! உங்களின் முழுமையான ஆதரவு தேவை என்று வெல்ஃபேர் கட்சியின் மாநில் செயலாளர் ம.முகமது கவுஸ் தெரிவித்துளார் .

ம. முகமது கவுஸ் 9003018656

புனித ரமலான் வாழ்த்துக்கள்..