ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை கணக்கில் வராத ஒரு லட்சம் பணம் பிடிபட்டது

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையினை கொண்டு உள்ளது. இதற்கான வட்டாட்சியர் அலுவலகம் ஆண்டிப்பட்டியில் உள்ளது. இங்கு தேர்தல் பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூக நலத்துறை பிரிவு, இ சேவை மையம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.

ஆண்டிப்பட்டி தாலுகா முழுவதும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 117 பொது விநியோக கடைகளில் 70க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதன் கீழ் 74 ஆயிரத்துக்கும் மேல் குடும்ப அட்டைதாரர்கள் பயனாளிகளாக உள்ளனர். பொது விநியோக கடைகளில் இருப்பு நிலவரங்களை மாதத்திற்கு இரண்டு முறை விற்பனையாளர்கள் ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சமர்ப்பிப்பது வழக்கம்.இந்நிலையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விற்பனையாளர்கள் வழக்கம்போல் இருப்பு நிலவரங்களை எழுதி ஒப்படைக்க காலை வந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்தலஞ்ச ஒழிப்பு துறை மற்றும் மதுரை ஆய்வுக்குழு அலுவலர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து ஆய்வு செய்தனர். அப்போது அலுவலகத்தில் விற்பனையாளர்களிடம் பெறப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். டிஎஸ்பி சத்தியசீலன்,ஆய்வாளர் சுந்தர்ராஜ், எஸ்எஸ்ஐ. சுருளி வேல் மற்றும் மதுரை ஆய்வுக் குழு அலுவலர்கள் இணைந்து இந்த சோதனையை நடத்தினர்.இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறியதாவது

ஆண்டிப்பட்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் எங்களுக்கு கிடைத்த தகவல் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது வட்ட வழங்கல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும் வட்ட வழங்கல் அலுவலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கைப்பற்றப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்து அதன் பின்னர் வழக்கு பதிவு செய்து இந்த பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் நீதிமன்ற உத்தரவின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

செய்தி வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..