இராமநாதபுரத்தில் “காவலர் நிறை வாழ்வு பயிற்சி “ வகுப்புகள் ..

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக , காவல் ஆளினர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெறும் ‘காவலார்  நிறைவாழ்வுப் பயிற்சி”  வகுப்பு, 30.11.2018 அன்று காலை 09.00 மணியளவில் திருமதி.N.காமினி, இ.கா.ப, காவல்துறை துணை தலைவர், இராமநாதபுரம் சரகம் மற்றும் திரு.ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் மாவட்டம் ஆகியோர்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மேலும், நிகழ்ச்சியில் 1)திரு.கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , தலைமையிடம், இராமநாதபுரம், 2)திரு.நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் , இராமநாதபுரம் உட்கோட்டம், 3)திரு.முருகேசன், துணை காவல் கண்காணிப்பாளர் , கீழக்கரை உட்கோட்டம், 4)திரு.ரவிந்திரபிரகாஷ், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குற்றப்பிரிவு, 5)திரு.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் , நில மோசடிப்பிரிவு, 6)திரு.அறிவழகன், துணை காவல் கண்காணிப்பாளர் , மதுவிலக்கு பிரிவு மற்றும் 7)திரு.கோகுலகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப்பாளர்  (பயிற்சி) ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியானது 30.11.2018-ம் தேதி முதல் 02.12.2018-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியானது பெங்களுரூவில் (NMHANS-National institute of mental Health and Neuro sciences) பயிற்சி பெற்ற காவல் ஆய்வாளர்  திருமதி.ராதா, சார்பு ஆய்வாளர்  திருமதி.மஹாலெட்சுமி, கீழக்கரை, தாசீம் பீவி அப்துல்காதா; மகளிர்  கல்லூரியின் உதவி பேராசிரியர்  செல்வி.தனியாமோல், மற்றும் சமூக ஆய்வலர்கள் மூலம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் – 4, சார்பு ஆய்வாளர்  – 8 மற்றும் காவல் ஆளினர்கள் – 18 என மொத்தம் 40 காவல்துறையினர்  கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர் . மேலும், அவர்களுக்கு பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியின் நிறைவு நாளில் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், 30.11.2018 மற்றும் 01.12.2018 இரண்டு நாட்கள் காவல் ஆளினர்களும், 02.12.2018-ம் தேதி காவல் ஆளினர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொள்ள உள்ளனர். இப்பயிற்சியானது, வேலை, குடும்பம் மற்றும் சமுதாய சூழல்களால் காவலர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் ஏற்படும் மன அழுத்தத்தினை போக்கவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற மன அழுத்தங்கள் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டினையும் அறிவுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. மேலும், இப்பயிற்சியின் மூலம் காவல்துறையினர் மன அழுத்த மேலாண்மை உத்திகளை தெரிந்து கொண்டு, ஒத்திசைவான, ஆதரவுமிக்க பணி சூழலில் செயல்படவும், தனிப்பட்ட மற்றும் குடும்பம் சார்ந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவரவும் வழிவகுக்கும், ஒட்டுமொத்தத்தில், தனிமனித மேம்பாட்டையும், காவல்துறை நிர்வாக மேம்பாட்டை அடைவதற்கும் இந்நிறைவாழ்வு பயிற்சி உதவியாக இருக்கும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..