பாம்பனில் 8ம் எண் புயல் எச்சரிக்கை ….. கூண்டின் எண்களும் விளக்கமும்..

புயல் காலங்களிலும், மழை காலங்களிலும் அடிக்கடி தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் பல வகையான புயல் கூண்டு எண்கள் கூறுவதை பார்த்திருப்போம், கேட்டிருப்போம், ஆனால் நம்மில் அனேகருக்கு அதனுடைய விளக்கம் தெரிய வாய்ப்பு குறைவாகும்.  அதை எளிதில்  அறிந்து கொள்ளும் வகையில் கீழே படத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பாசமயம் பாம்பனில்  8 வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  புயல் எச்சரிக்கை கொடி (கூண்டு ) எண்ணின் விளக்கம்.

1 – காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
2 – புயல் உருவாகியுள்ளது.
3 – திடீர் காற்று மழை துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
4 – புயல் துறைமுகம் வழியே கரை கடக்கும்.
5 – துறைமுகத்தின் இடது பக்கமாக கரையை கடக்கும்.
6 – துறைமுகத்தின் வலது பக்கமாக கரையை கடக்கும்.
7 – துறைமுகம் கடுமையாக பாதிக்கப்படும்.
8 – இடது பக்கமாக புயல் கடந்து மோசமான வானிலை நிழவும்.
9 – வலது பக்கமாக புயல் கடந்து மோசமான வானிலை நிழவும்.
10 – பெரும் பாதிப்பும் அழிவும் ஏற்படும்.
11 – பேரழிவும் மோசமான வானிலையும் தொலைதொடர்புகள் அற்றும் போகும்.

11ம் எண்  ஏற்றப்பட்டால் உச்சபட்ச எச்சரிக்கை என பொருள்.

ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு வடிவத்தில் (உருளை முக்கோணம்… என) கூண்டுகள் துறைமுக கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered