Home கல்வி “என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்..

“என்னைத் தேடி”…நம்மை நாமே தேட வைக்கும் புத்தகம்..

by ஆசிரியர்

15 வருடங்களுக்கு முன்பு சென்னை கல்லூரியில் திருமறைநூலை, இந்நூலின் ஆசிரியருக்கு பரிசளித்த பொழுது, சிந்தனையில் இல்லாத விசயம், மீண்டும் முகம் அறியாத நபராக ஷார்ஜா புத்தக கண்காட்சியில் சந்தித்து, பின்னர் நூல் ஆசிரியரின் தந்தை மூலம் அறிந்து கொள்வோம், என் நண்பரின், உற்ற வழிகாட்டியின் மகள் என்பதை. 

பின்னர் புத்தகத்தை பக்கம் பக்கமாக படிக்க தொடங்கிய பொழுதுதான் புரிந்தது, தொலைத்த உறவுகளைத்தான் இந்த “என்னைத் தேடி” தேடி செல்கிறது, அதில் நானும் ஒருவன் என்பதை உணர வைத்தது.

இன்றைய அதிநவீன உலகில் அதிவேகமாக  முன்னேறி செல்கிறோம் என்ற முனைப்பில் பல அருமையான தருணங்களையும், உறவுகளையும் தொலைத்து விட்டு தேடி வருகிறோம் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக, அதை வாசிக்கும் ஒவ்வொருவரையும் நூலாசிரியர் உணர வைக்கிறார்.

இந்நூலாசிரியர் கனவின் மூலமாக தன் எண்ணங்களை போல் பிறரின் யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை பல கதாபாத்திரங்கள் மூலம் உணர்த்தியதோடு அல்லாமல், வாழ்வின் அவசியங்களன தியானம், இயற்கை உணவு, வாசித்தல், உறவுகள் போன்றவற்றை ஆழ பதிய வைத்துள்ளார்.  இதற்கு அழகிய உதாரணம் “நன்றி” என்பதை தன் கனவில் கண்ட கல்லை யதார்த்த உலகில் காண்பதாக முடித்திருப்பது.  

ஆக மொத்தம் இந்நூலில் படித்து முடிக்கும் பொழுது நிச்சயமாக நாம் தொலைத்து கொண்டிருக்கும் உறவை, சந்தோஷத்தை  தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தலை தூக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த இளம் எழுத்தாளர் இன்னும் பல படைப்புகள் படைக்க மனமுவந்த வாழ்த்துக்கள் பல…

என்னைத் தேடி” புத்தகத்தை வலைத்தளத்தின் மூலமாக ஆர்டர் செய்ய:-

http://www.marinabooks.com/detailed?id=6%203946&name=என்னைத்%20தேடி

http://www.noolulagam.com/product/?pid=36043

http://www.panuval.com/ennai-thedi

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!