102 மாணவர்களுக்கான (“வெற்றி நமதே”); கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய 102மாணவர்களுக்கான (“வெற்றி நமதே”); கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முத்துபேட்டை தூயவளனார் மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் தலைமையிலும் ,  கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.  பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ் மற்றும் முதல்வர் ஞானபிரகாசம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையில் ஒரு மாணவன் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் கல்வி மிகவும் அவசியம். நாட்டினுடைய வளர்ச்சி; தொழிற்புரட்சியில் உள்ளது. தொழிற்புரட்சிக்கு பொறியியல் படிப்பு மிக அவசியம் எனவே பொறியியல் பட்டதாரிகளாக படித்து வருங்கால சாதனையாளராக உருவாக வேண்டுமென வாழ்த்தி எங்கள் கல்லூரியில் பொறியியல் பாடம் கற்றுதருவதோடு Cloud Computing, CISCO Networking,  CADD, Big Data, Data Mining, Embedded System, ஆங்கிலப்புலமையை பயிற்றுவித்தல் மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான தனித்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு அதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கு வழிவகுத்து கொடுக்கின்றோம் என தெரிவித்தார்.

கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை துணைப் பேராசிரியை தீபா கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு  உதவித்தொகைகள் கிடைக்கக்கூடியது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  102 தேர்வில் அதிக மதிப்பெண் பெற கையாள வேண்டிய வழிமுறைகள் பற்றி ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய இயற்பியல் பிரிவு ஆசிரியர் தவராம் குமார் எலைட் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்,  வேதியியல் பிரிவு ஆசிரியர் அபிமானன்,  அரசு மேல்நிலைப் பள்ளி, காவனூர் கணித பிரிவு ஆசிரியர்,  நஜ்முதீன ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கீழக்கரை ஆகியோர் மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நாளைய வெற்றியாளர்களாக விளங்க வேண்டும் என்று ஆலோசனைகளை விளக்கங்களுடன் எடுத்துக் கூறினர். மேலும் சாதனையாளர்கள் உருவாவது அவர்களுடைய விடாமுயற்சியால்தான் நீங்கள் நாளைய சாதனை படைக்கும் பொறியாளாராக உருவாவதற்கு விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டுமென வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் தூய வளனார் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றி நமதே நிகழ்ச்சியின் மூலம் 102 தேர்வினை எவ்வாறு எழுதுவது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டு பயனடைந்தனர். கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துணைப் பேராசிரியர் அகமது ஹ|சைன் ஆசிப் பள்ளி மாணவர்களுக்கு தேர்விலும்இ வாழ்விலும் சிறந்து விளங்குவதற்கான நம்பிக்கையான நெறிமுறைகளை விளக்கங்களுடன் எடுத்துரைத்தார்.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர் பூபாலன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன்இ, மயில்வேல்நாதன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..