கீழக்கரையில் ஹிஜாமா வைத்தியம் ..

ஹிஜாமா ( حجامة  ) என்றால் என்ன?

ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة  lit. “sucking”) என்ற அரபி வார்த்தை  hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).

இரத்தம் சீர் கேடு அடையுமா ?

எந்த நோய் வந்தாலும் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் இரத்தத்தை பாதிக்கிறது.  ஆயுர்வேதத்தில் பித்தத்தின் மறு உருவாக இரத்தம் கருதப்படுகிறது. அதிகமான நோய்களுக்கான காரணம் இரத்தத்தில் உள்ள கோளாறுகள். உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகள், அமில காரதன்மையில் ஒரு சம நிலை இல்லாதது, அதிகமான வேதி பொருட்கள் அடங்கிய மருந்துகள், எண்ணை தேய்த்து குளிக்காதது, இரவு கண் விழிப்பு என்று பல்வேறு காரணத்தால் இரத்தம் மென் மேலும் கேடு அடைகிறது. அதை தான் கரும் பித்தம் தான் அநேக நோய்க்கு காரணம் என்று யுனானி மருத்துவம் சொல்கிறது ,பித்தம் மிகுந்த நோய்களே இரத்தம் கேடு அடைய செய்யும் காரணம் என்று ஆயுர்வேத மருத்துவமும் ,சித்த மருத்துவமும் வழி மொழிகிறது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளே பெரிய நோய்க்கு காரணம். நிண நீர் ஓட்ட பாதிப்பே பல கட்டிகளையும், கேன்சர் போன்ற நோய்களையும் உறுவாக்குகிறது, வளர்சிதை மாற்றமே (மேட்டபாலிக் நோய்கள் ) பெரிய நோய்களை உருவாக்குகிறது. உயிர் சக்தி இல்லாத-எதிர்ப்பு சக்தியில்லாத இரத்தமே ஆட்டோ இம்யூன் நோய்களான சொரியாசிஸ், முடக்கு வாதம், தைராய்ட்,மேலும் பெயர் தெரியாத நோய்களை உருவாக்குகிறது.

ஏன் இரத்தம் வெளியேற்ற வேண்டும் ?

மனிதனுக்கு சராசரியாக ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது .120  நாட்களுக்கு ஒரு முறை புதிதாக இரத்தம் உருவாகி கொண்டே இருக்கிறது. கெட்டுபோன இரத்தத்தை சுத்தம் செய்ய நமது கழிவு உறுப்புகள் சிறுநீரகம் ,ஜீரண உறுப்புகள்  முக்கியமாக கல்லீரல் ,நுரையீரல் ,தோல்  போன்ற உறுப்புகள் பிறந்தது இடைவிடாது வேலை செய்து கொண்டே இருக்கிறது. இந்த முக்கிய உறுப்புகளே கழிவு நீக்கம் செய்யாமல் பாதிப்படையும் போது ,வேலை செய்ய சிரமப்படும் போது கெட்டுபோன இரத்தம் கழிவு நீக்கம் எப்படி நடக்கும்?. இயற்கையான முறைபடி கழிவு நீக்கம் நடை பெறாத போது அதற்கென்று முறையாக இரத்தம் வெளியேற்றுவதால் –ஹிஜாமா தெரபி செய்வதால் பெரிய நோய்களையும் நாள்பட்ட நோய்களையும் குணமாக்க முடியும்.

இத்தகைய குணம் உள்ள ஹிஜாமா மருத்துவம் கடந்த வருடம் சில வாரங்கள் மேலத் தெருவில் செய்யப்பட்டது.  தற்பொழுது கீழக்கரை வடக்குத் தெருவில் ஹிஜாமா மருத்துவத்தில் பட்டய படிப்பு படித்தவர், இந்த சிகிச்சை வழங்குகிறார். விரும்புவோர் தொடர்புக்கு :- முஹம்மது சிராஜுதீன். மாஸ்டர் ஆஃப் டிப்ளமோ இன் ஹிஜாமா இடம் – வடக்கு தெரு (வண்ணான் கோயில் எதிரில்) தொடர்புக்கு:- – 8870156885

———-////:/——————-///::—————-

 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..