காட்டுக்குள் உருவாக்கிய கோவில் கும்பாபிஷேகம்…

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பனைத்தொழிலாளர்கள் நிர்மாணித்த பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேம் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்புல்லாணி அருகே அடர்ந்த பனைமரங்கள் உள்ள காட்டுப்பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட எல்லை கிராமங்களிலிருந்து 4 குடும்பத்தினர் தங்கி பனைத்தொழில் தொழிலில் ஈடுபட்டனர். பனைகளிலிருந்து பதனீர் இறக்கி கருப்பட்டி தயாரித்து பனை ஓலைகளில் பாய் முடைந்து வருமானம் ஈட்டினர். நாளடைவில் பல குடும்பங்கள் இங்கு வந்து நிலம் வாங்கி வீடுகள் கட்டியும் குத்தகைக்கு காட்டு பனைமரங்களை வாங்கி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 24 வீடுகள் உள்ள குடியிருப்பிற்கு அய்யனார்புரம் என பெயரிட்டு அவர்களுக்கென பத்ரகாளியம்மன், விநாயகர் கோயில்களை கட்டினர்.

இக்கோயில்களுக்கு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆக, 29 ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று நான்காம் கால யாசாலை பூர்ணாஹுதி பூஜைகள் நிறைவுபெற்று வேத விற்பனர்கள் மந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு பத்தரகாளியம்மன் மற்றும் விநாயகர் சிலைகள் மீது புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகளை செய்தனர். சுற்றுப் பகுதி கிராமங்களிலிருந்து ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். —————/////————-//:::————-

புனித ரமலான் வாழ்த்துக்கள்..