இராமநாதபுரம் மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் உட்பட பல பள்ளிகள் பங்கேற்பு..

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டார அளவில் குழு விளையாட்டுப் போட்டிகள் பெருங்குளம் அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  45க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 14, 17,19 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கபடி, எறிபந்து, மேசை பந்து, கோக்கோ, டெனி கேட், எறிபந்து, வாலிபால் போன்ற  விளையாட்டுகள் நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிளான போட்டியில் 32கும் அதிகமான பள்ளிகளில் இருந்து 500கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் வாலிபால் அரையிறுதி போட்டியில் இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி மோதியதில் இருமேனிஅரசு மேல்நிலப்பள்ளி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டிக்கு இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியும், வேர்கோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியும் தகுதி பெற்றன. இப்போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் கோபி லட்சுமி லூர்து மேரி முத்தமிழ்செல்வி ரமேஷ் அறிவியல் ஆசிரியர் தயாளன் நடத்தினார்கள்.

அதே போல் கீழக்கரை குழு விளையாட்டு போட்டி வட்டார அளவில் 40 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கிடைய பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றன. இப்போட்டிகளில் 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் கலந்துக்கொண்டனர். இதில் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும், வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் இடையே நடைபெற்ற கபாடி போட்டியில் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றிப்பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தலைமைஆசிரியை யுனெசி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், ரமேஷ், சாலோமி, ஆர்த்தர் சாமுவேல், சலீம், ராஜன் ஆகியோர் பாராட்டினார்கள்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..