Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் 06.08.18 உள்ளூர் விடுமுறை..மாற்றாக 18-08-2018 பணிகள் நடைபெறும் ..

இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் 06.08.18 உள்ளூர் விடுமுறை..மாற்றாக 18-08-2018 பணிகள் நடைபெறும் ..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் 06.08.18 அன்று ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு அரசு அலுவலங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடியில் சந்தனக்கூடை காண மக்கள் கூட்டம் தர்கா முதல் ஏர்வாடி காவல் நிலையம் தாண்டி நிரம்பி இருந்தது. கீழக்கரை மற்றும் சுற்றி வட்டார மக்கள் நிறைய நபர்கள் சிலர் குடும்பத்தாருடனும், சிலர் நண்பர்களுடனும் வந்திருந்தனர். அதேபோல் கீழக்கரையில் பெண்கள் விடிமுழிப்பு நிகழ்ச்சியால் ஒவ்வொரு குழுவினராக ஆங்காங்கே காண முடிந்தது.

இராமநாதபுரம் டூ ஏர்வாடிக்கு 160 சிறப்பு பஸ்கள் அரசாங்கத்தின் ஏற்பாட்டால், இரவு முழுதும் ஏர்வாடிக்கு வருவதற்கும் போவதற்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிரமமின்றி இருந்தது. விழாவில் இன்னிசை கச்சேரி, இலவசமாக ரோஸ் மில்க், ராட்டினங்கள் உட்பட ஏராளமான கடைகள் இருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசாரும், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீ அணைக்கும் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

அரசு அலுவலகப் பணி 6ம் தேதி விடுமுறைக்கு பதிலாக, வரும் 18.08.18 அன்று அரசு அலுவலகங்களில் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று ஒரு நாள் அரசு அலுவலக வேலைக்காக, மாவட்ட பொதுமக்கள் யாரும் வீணாக அலைய வேண்டாம்.

தகவல்: மக்கள் டீம் :

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!