Home கட்டுரைகள் மறக்க முடியுமா ?? அந்த 2001 ஆகஸ்ட் 6 – கருகிய நாட்களை..

இன்று (06-08-2018) அதிகாலை ஏர்வாடியில் சமய நல்லிணக்க திருவிழாவாக ஏர்வாடி சந்தனக்கூடு கோலகலமாக கொண்டாடிய களிப்பில் மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் கடந்த 18 வருடங்களாக தீயில் கருகிய உள்ளங்கள் இன்னும் விழித்து கொண்டுதான் இருக்கும்.

இன்றைய தேதியில் கடந்த கால வரலாற்று பக்கங்களை புரட்டினால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் எண்ணற்ற நிகழ்வுகளின் பதிவிருக்கலாம். சர்வதேச அளவில் ஐப்பானில் ஹிரோஷிமா நகரம் அணுகுண்டு தாக்குதலில் சிதைந்து அப்படி நகரம் இருந்த அடிச்சுவடு இல்லாமல் போனது. அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளில் இந்த கேள்வி கேட்கப்படுமானால் இயன்ற வரை பதிலளித்து விடுவோர் ஏராளமானோர் இருக்கக் கூடும்.

ஆனால் இன்றைய தினம் தேசிய அளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் பற்றி கேட்டால் ஓட்டு போட தகுதி வாய்ந்த 11. 22 லட்சம் பேரில் எத்தனை பேருக்கு தெரியும் சந்தேகமே. சில நிமிடங்கள் வாய்ப்பளித்தால் கூகுளில் தேடி பதில் சொல்லி விடுவார்கள்.

ஆம் இதே நாளில் 06/08/2001 அன்று ஏர்வாடி மன நல காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தனக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் உயிராபத்தை உரக்க கத்தி வெளிப்படுத்தும் உணர்வின்றி 15க்கும் மேற்பட்டோர் கரிக்கட்டைகளாய் உயிர் மாய்ந்த நாள். இக்கொடூரம் நிகழ்ந்த பின்னரே மனநல காப்பகங்கள் நடத்த ஏராளமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தன.

உலகை அறியாமலே உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த பதிவு..

தகவல் உதவி :- R. முருகன் (MRKP)..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!