தமிழக போலீசாரை சமூக வலைதளத்தில் மோசமாக விமர்சித்த இளைஞரை இந்தியாவிற்கு நாடு கடத்தி கைது..

இணையத்தளத்தில் தமிழகக் காவல்து றையினரைக் கடுமையாக விமர்சித்த இளைஞரைத் குவைத்தில் இருந்து நாடு கடத்தி திருச்சி காவல்துறையினர் கைது செய்தனர்.

சில மாதங்களுக்கு முன் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உஷா, போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்ற போது கீழே விழுந்து உயிரிழந்தார்.

இது தொடர்பாகச் சிவகங்கை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் தமிழக காவல்துறையினரை இணையத்தளத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். சங்கரலிங்கம் மீது திருவெறும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குவைத்தில் வேலை பார்த்து வந்த சங்கரலிங்கத்தை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இந்தியத் தூதரகம் மூலமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் குவைத் அரசு சங்கரலிங்கத்தை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியது. கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பிய சங்கரலிங்கத்தைத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் திருச்சி காவல்துறையினர் கைது செய்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..