பரமக்குடியில் கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுக்கு இலவச கருத்தரங்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் அரசு வேலைக்கான போட்டி தேர்வுக்கு இலவச கருத்தரங்கம் நடைபெற்றன. இதில் ஒன்பது ஆலோசனை நிபுணர்கள் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

கூட்டுறவு சார்பதிவாளர் ஆண்டனி பட்டுராஜ் மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினார். டிஎன்பிசி மத்திய மாநில அரசு வேலைகளுக்கான போட்டி தேர்வு எழுதும்போது முதலாவதாக இலக்கு வைக்க வேண்டும், பாடப்பிரிவை கவனமாக பிரித்து படிக்க வேண்டும், முந்தைய ஆண்டு வினாக்களை தெளிவாக படிக்க வேண்டும், படிப்பதற்கான திட்டத்தை வழிவகுக்க வேணடும், வழிகாட்டுதலை கையாள வேண்டும் தினசரி தேர்வுகளை எழுத வேண்டும் என்றார். ரயில்வே வேலை வங்கி வேலை ஐஏஎஸ் ஐபிஎஸ் வேலைகளுக்கான பாடங்களை படிக்கும் பொழுது ஆன்லைன் முறையில் எப்படி எதிர்கொள்வது?, ஆஃப்லைன் முறையில் எப்படி எதிர்கொள்வது?  என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவனத்தில் படித்து வெளியேறும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் மூன்று வேளைக்கு குறையாமல் அரசுத் தேர்வில் வெற்றி பெற்று வெளியே வருவார்கள் என்றார். மேலும் வகுப்புகள் முழுவதும் வெற்றி பெற்றவர்களால் மட்டுமே எடுக்கப்படுகிறது,  தரமான பாடபுத்தகங்கள் வழங்கப்படுகிறது.  இந்த நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து அரசாங்க வேலையில் சேர்ந்துள்ளனர்.  ஒருமுறை கல்விக் கட்டணம் செலுத்தினால் வேலை கிடைக்கும் வரை படிக்கலாம், ஹாஸ்டல் வசதி மற்றும் இலவச நேர்காணல் வகுப்பு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கனரா வங்கி துணை மேலாளர் நாகம்மாள் வங்கி தேர்வு எழுதுவது பற்றி எடுத்துரைத்தார்.  வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி அறிமுகவுரை நிகழ்த்தினார். வருவாய் ஆய்வாளர் சத்தியசிவம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவது பற்றியும், வருமானவரித்துறை சஞ்சீவனி எஸ்எஸ்சி தேர்வு எழுதுவது பற்றியும் எடுத்துரைத்தனர்.  வருவாய் ஆய்வாளர் கோபிநாத் வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ் கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் மகேஸ்வரி வெற்றியாளர்கள் உரையாடல் நிகழ்த்தினர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி அருண் சுரேஷ் அகடமி நிறுவனத்தைப் பற்றி எடுத்துரைக்கையில், இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனி தங்கும் வசதி புதிதாக வரும் மாணவர்களுக்கு இலவசமாக தங்கும் வசதி 24 மணி நேரமும், படிக்கும் வசதி இராமநாதபுரம் பரமக்குடி கீழக்கரை ராமேஸ்வரம் இடங்களிலிருந்து பேருந்து வசதி இலவச மாதிரி, தேர்வுகள் பட்டப்படிப்பு, தமிழ் வழியில் பயின்று இருந்தால் கட்டணத்தில் 50 சதவீத சலுகை கோடிங் ஷீட் மூலம் தேர்வுகள் வசதிகள் உள்ளது என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..