இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..

இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா மூடைகள் கடத்த உள்ளதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இராமநாதபுரம் கியூ பிராஞ்ச் போலீசார் உச்சிப்புளி அருகே தோப்பு வலசை, மண்டபம் அருகே சீனியப்பா தர்ஹா கடற்கரையில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி முருகன்(48), இராமேஸ்வரம் நடராஜபுரம் நாகசாமி மகன் ஜெயகணேஷ் 38, திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கியைச் சேர்ந்த வேலு மகன் முத்து 37 ஆகியோர் என தெரிந்தது.

விசாரணையில் கேரளா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து மூடைகளாக கட்டி வைத்திருந்த கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றது உறுதி செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும் முருகன், ஜெயகணேஷ், முத்து ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.