ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தின் முன்பு இறந்த சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சாலையை மறித்து ஆர்பாட்டம்.

சேத்திடல் கிராமத்தை சேர்ந்த முத்துமணி(23).இவர் காதலித்து சிவகங்கை மாவட்ட மல்லிகோட்டையை சேர்ந்த மயில்வாசகம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். 17-07-2018 அன்று இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படடையில் காவலதுறையினர் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிந்து நேற்று பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடலை சொந்த ஊரான சேத்திடலுக்கு கொண்டு செல்லும் வழியில் அந்த பெண்ணின் உறவினர்கள் ஆர்.எஸ் மங்கலம் பேருந்து நிலையத்துக்கு முன்பு அமரர் ஊர்தியை வழி மறித்து உடலை நடுரோட்டில் வைத்து பேருந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் காவல் ஆய்வாளர் பாண்டியம்மாள் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டில் உறவினர்கள் மறியலை நிறுத்திவிட்டு பிரேதத்தை வாங்கி சென்றனர்.