திண்டுக்கல் தம்பதியரிடம் கொள்ளை முயற்சி..

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சுதா. இருவரும் வேலைக்கு சென்றிருந்த சமயம் பார்த்து 3 பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களது வீட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிடவே அவர்கள் தப்ப முயன்றனர். அவர்களில் ஒருவனான விழுப்புரத்தை சேர்ந்த ஜெய்சங்கரை பொதுமக்கள் விரட்டி பிடித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஒடிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.