நாய்களுக்கும், கால்நடைகளுக்கும் கூடாரமாக மாறி வரும் கீழக்கரை தெருக்கள்…

கீழக்கரை நகர் வீதிகளில் உல்லாசமாக திரியும் தெரு நாய்களும், ஒய்யாரமாக சுற்றி வரும் கால்நடைகளும் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ளது. கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன்பு தெரு நாய்களை அப்புறப்படுத்த மனுக்கள் கொடுக்கப்பட்டு சில நாட்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டது, பின்னர் மீண்டும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
 
அதே போல் கீழக்கரை நகர் முழுதும் உள்ள ரோடு மற்றும் வீதிகளில் ஒய்யாரமாக சுற்றித் திரியும் மாடுகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.  இந்த கால்நடைகள் சாலைகளில் ஏற்படுத்தும் தடங்கலால் பல நேரங்களில் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகிறது.
அதே போல் வேலை நேரங்களில் சாலைகளில் செல்லும் கால்நடைகளால் சாலையோர வியாபாரிகள், வியாபார ஸ்தலங்களில் வைத்திருக்கும் பொருட்களும் நாசப்படுத்தப்படுகிறது.  மேலும் இரவு நேரங்களில் சாலை நடுவில் கால்நடைகள் படுத்து இருப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது.
 
இந்த விசயத்தில் கீழக்கரை நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழக்கரை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தி மூலம்:- மக்கள்  டீம்  & சட்ட விழிப்புணர்வு இயக்கம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..