இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை..

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஸ்கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், தனுஸ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிடவேண்டும் என சமுகஆர்வலர்கள் கோரிக்கை.
இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஸ்கோடி  தென்கடல் பகுதி கடந்த சில நாட்களாக இயல்பாக இருந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுமார் 20அடி உயரத்திற்கு ராட்ச அலை எழுகின்றது.  இதனால் நாட்டு படகு மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடிக்க செல்லாமல் படகை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் தனுஷ்கோடிக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலை பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலின் ஆபத்தை அறியாமல் கடலில் குளிக்கவும் முன்வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் மட்டும் சுற்றுலாபயணிகளை தனுஸ்கோடி பகுதிக்கு அனுமதிக்காமல் தடை செய்ய வேண்டும், இல்லையென்றால் சுற்றுலாபயணிகள் படகுநிறுத்தும் இடத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும், இல்லையெனில்  உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவும்.  எனவே சுற்றுலாபயணிகளை தனுஸ்கோடி பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க உத்திரவிடவேண்டும் என சமுகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image