உதவுவது பல விதம்.. “E-CHARITY” புது விதம்..

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சாமானியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டும், நீதி மறுக்கப்பட்டு வரும் வேளையில் அம்மக்களுக்கு குரல் கொடுக்கவும், உதவிக் கரம் நீட்டவும் ஒரு பிரிவினர் உழைத்த வண்ணமும் அத்தடங்கல்களை உடைத்த வண்ணமும்தான் உள்ளனர்.  அந்த வரிசையில் தேவையுடையவர்களை கண்டறிந்து உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலிதான் ஈ-சேரிட்டி (E-CHARITY).

இந்த பதிய செயலி UNITED WELFARE ORGANISATION  என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டு தற்சமயம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  இந்த UNITED WELFARE ORGANISATION – (www.unwo.org)  அமைப்பு சமுதாயத்தின் மீமு அக்கறை கொண்ட தன்னார்வலர்களால் சென்னையை தலையிடமாக கொண்டு ஆரம்பம் செய்து இன்று உலகில் உள்ள பல்வேறு மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.  அவர்களின் சேவையில் ஒரு பகுதிதான் இந்த ஈ-சேரிட்டி (E-CHARITY) செயலி.

இந்த செயலி மூலம் தேவையுடையவர்களின் விபரங்களை சேகரித்து, சரிபார்த்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.  மேலும் உலகில் பல இடங்களில் ஜகாத் போன்றவை முறையாக வசூலிக்கப்பட்டாலும் தேவையான நேரத்தில் தேவையுடடையவர்களுக்கு சென்றடையாமல் இருக்கும் நிலையும் இருந்துதான் வருகிறது.  மேலும் இந்த செயலி மூலமே தானம் செய்ய விரும்புபவர்களும் தங்களுடைய விபரங்களை பதிவு செய்து தான தர்மங்கள் செய்யலாம்.  அதே போல் இந்த அமைப்புக்கு தானம் செய்யும் தொகைக்கு இந்திய அரசியல் சட்டம் 80G எனப்படும் வரி விதிவிலக்கும் உண்டு.

https://youtu.be/N4lMQLhUnlM

புனித ரமலான் வாழ்த்துக்கள்..