தண்ணீர் தேவை அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஜனாதிபதிக்கு கடிதம்..

இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவ,  மாணவிகள் 2,500 பேர் தண்ணீரின் அவசியம் குறித்தும், தமிழக மக்களுக்கு தண்ணீர் தேவை குறித்தும் கையெழுத்து இயக்கம் நடத்தி   ஜனாதிபதிக்கு கையொப்பமிட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளியில் பயிலும் சுமார் 2,500 மாணவ, மாணவிகளுக்கு தண்ணீரின் அவசியம், தண்ணீர் மேலாண்மை குறித்து விளக்கப்பட்டது.  தொடர்ந்து தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து தண்ணீர் மேலாண்மை குறித்து நன்கு அறிந்து கொண்ட மாணவர்கள் தண்ணீர் அவசியம் மற்றும் வீணாக்காமல் பயன்படுத்துவது,  தமிழக மக்களுக்கு தண்ணீரின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இதில் பள்ளி தாளாளர் , பள்ளி முதல்வர் ராஜமுத்து, நிர்வாக அதிகாரி சங்கர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் முரளிதரன், செயலாளர் ஆத்மா கார்த்திகேயன் ஆகியோர் கையொப்பமிட்டு துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவர்கள் தனிதனியாக கையொப்பமிட்டு அதனை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். முற்றிலும் அரசியல் சார்பற்ற நிலையில் தண்ணீர் பற்றி மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.