டாடா ஏஸ் வாகனம் மோதி ஒருவர் பலி..

திருவாடானை அருகே திருவெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் மகன் தர்மராஜ் வயது 45.  இவர் திருவெற்றியூரிலிருந்து தேவகோட்டைக்கு டிராக்டரில் சாமியானா பந்தல் போடும் தளவாடச்சாமான்களை ஏற்றிக் கொண்டு திருச்சி – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோவணி அருகே வந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டாடா ஏஸி வாகனம் டிராக்டர் மீது மோதியதில் தர்மராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான டாடா ஏஸி டிரைவர், காரைக்குடி வட்டம், அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் மோகன் குமார் வயது 34 என்பவரும், அவருடன் பயணம் செய்த காரைக்குடி வட்டம்,  மித்ராவயல் கிராமத்தைச் சேர்ந்த கட்டக் கருப்பன் மகன் இளையராஜா வயது 35 என்பவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இத்தகவல் அறிந்த திருவாடானை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, Sl.கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்ட இருவரையும் சிகிச்சைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்  இளையராஜா சிகிச்சை பலனின் றி பலியானார் இறந்த தர்மராஜ்,  இளையராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானைGH க்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து திருவாடானை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.