‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது

தமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஆங்கில மருந்துகள் விற்பனை நிலையங்கள் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் ‘கீழை மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகில் இருக்கும் இமாம் ஜகுபர் சாதிக் வணிக வளாகத்தில் மீண்டும் புது பொழிவுடன் இன்று (14.04.2018) மாலை 4.30 மணியளவில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தகத்தை கிழக்கு தெரு ஜமாஅத் செயலாளர் நெகர் சிகாப் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கிழக்கு தெரு ஜமாஅத் துணைப்பொருளாளர் சட்டப் போராளி முகம்மது அஜிஹர், மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், சட்ட போராளிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் முகம்மது சாலிஹ் ஹூசைன்

அல் பையினா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜாபீர் சுலைமான், SDPI கட்சியின் கீழக்கரை நகர் துணை தலைவர் சட்டப் போராளி நூருல் ஜமான், சட்டப் போராளி முஹம்மது அஸ்லம், கீழக்கரை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் முகம்மது நதீர், S.M.மாசிக்கடை கலீல் ரஹ்மான் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கீழை மக்கள் மருந்தகத்தின் முதன்மை நிர்வாகி சட்டப் போராளி ஜாபீர் சுலைமான் கூறுகையில் ”இறைவனுடைய அருளால் கீழக்கரையில் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று, மக்கள் பாதை இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் உமர் முக்தார் அவர்களால் இதே இடத்தில் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.

மக்கள் மருந்தகம் மூலம் கீழக்கரை பகுதி ஏழை எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் நிர்வாக மாறுதல் காரணமாக ஒரு சில மாதங்கள் மக்கள் சேவை முற்றிலும் தடைபட்டு இருந்தது. தற்போது அல்லாஹ்வின் கிருபையால் மீண்டும் புதுப்பொலிவுடன் இன்று முதல் ‘கீழை மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் மருந்தகம் செயல்பட துவங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வழக்கம் போல் உங்கள் ஆதரவை தந்து பயன்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..