இராமநாதபுரம் மாவட்டம் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா..

மண்டபம் ஒன்றியம் ராஜா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் சார்பாக இன்று குஞ் சார்வலசையில் இராஜா நகரில் இன்று காலை சுமார் 10-30 மணியளவில் ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சேவா ரத்னா இராஜா தலைமையில் டிரஸ்டி ராஜா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் ஜெயந்தி ராஜா மற்றும் டாக்டர் ஆர், தில்லைராஜ்குமார் இராஜா காலேஜ் செயலர் ஆகியோரின் முன்னிலையில் ராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் விஜய லட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பள்ளியின் மாணவி தில்லை ரித்திகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதைத் தொடர்ந்து வள்ளல் டாக்டர் இராமு களஞ்சியம் பவுண்டேன் இயக்குநர் லெட்சுமி களஞ்சியம் முன்னிலை வகுத்து கொடியேற்றி வைத்தார். பின்னர் இராமநாதபுரம் முன்னாள் அமைச்சர் சுப தங்கவேலன் கலந்து கொண்டு இராஜா கல்லூரியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதன் பின் கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தை திமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.த, திவாகர் திறந்து வைத்தார், கல்வி அலுவலகத்தை தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இரவிச்சந்திர ராம வன்னி திறந்து வைத்தார். கணினி ஆய்வகத்தை வேதாளை ரஹ்மத்துல்லா ஆலிம், வேதியியல் ஆய்வகத்தை கடற்பாசி ஆராய்ச்சி நிலைய பொருப்பு விஞ்ஞானி டாக்டர் ஈஸ்வரன், நூலகத்தை பங்கு பணியாளர் அருள் சந்தியாகு ஆகியோர் திறந்து வைத்தனர். கல்லூரியின் வரவேற்பரையை டாக்டர் சஹானா திறந்து வைத்தார்கள்.

பின்னர் நடந்த நிகழ்சியில் மண்டபம் ஷாஜஹான் மரைக்காயர், தாஜுல் இஸ்லாம், சம்மாட்டி பியூயல் சென்டர் உரிமையாளர் அன்வர் அலி, வெள்ளரி ஓடை பழனிச்சாமி நாடார் பாஸ்டர் ஞானபிரகாசம், எஜு பனேசியா இயக்குநர் தேனி அஜ்மல்கான் மற்றும் இராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இயக்குநர் டாக்டர் இளையராஜா மற்றும் பல தொழிலதிபர்களும், சமுதாய பெரியோர்களும் , தாய்மார்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக திமுகழக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத் ராஜா, நன்றி கூறினார். இவ்விழாவின் ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாக அலுவலர் மணிகண்ட ராஜா மற்றும் சைலஜா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் பணியாளர்கள் செய்திருந்தனர்.