Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அசிபாவுக்கு நீதி-, ஆக்கம்-அ.முத்துக்கிருஷ்ணன்…

#justiceforasifa

எட்டு வயது அசிபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது. அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஜனவரி 10 அன்று அசிபா காணாமல் போனாள் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை மாறாக அசிபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள். பின்னர் பெயருக்கு ஒரு புகாரை பெற்றுக் கொண்டு  பெயரளவில் ஒரு தேடுதலை நடத்தினார்கள்.
எட்டு வயது அசிபா தன் வீட்டு குதிரைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லும் போது கடத்தப்பட்டிருக்கிறார். அசிபாவின் உடல் முழுவதும் மனிதப் பற்கள் கடித்ததற்கான தடையங்கள் இருந்தன, அவளை பலாத்காரம் செய்து விட்டு அவள் மீது கற்கள் வீசி அவள் உடலை சிதைத்திருக்கிறார்கள். அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள். இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்கள் இந்துக்கள் என்பதாலேயே இந்த விஷயத்தை மோடி அரசும், மோடியின் அடிவருடி ஊடகங்களும் பேச மறுக்கின்றன.
இதில் முக்கிய விஷயம் ஒரு இந்து கோவிலில் வைத்து தான் அசிபா பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையை, நீதிமன்றத்தை நடவடிக்கை எடுக்கவிடாமல் காஷ்மீரில் உள்ள இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அசிபாவின் பெற்றோர் கேட்பதெல்லாம் அவளுக்கான நீதியை மட்டுமே, ஆனால் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நிகழ்ந்தும் இதுவரை அரசாங்கத்திடம் எந்த அசைவும் இல்லை.. ஒரு இந்து சிறுமியை இஸ்லாமியர்கள் இப்படி ஒருவார காலம் மசூதியில் வைத்து பலாத்காரம் செய்திருந்தால் மோடியும், இந்திய ஊடகங்களும் இப்படித்தான் அமைதி காத்திருக்குமா??
பிப்ரவரி 17 அன்று பலாத்காரம் செய்த கயவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் என்கிற அமைப்பு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் மூவர்ன கொடியுடன் ஊர்வலம் சென்று போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை பாஜகவின் மாநில செயலாளர் உள்ளிட்ட மாநில தலைவர்கள் வழிநடத்தினார்கள்.
கத்துவா மாவட்ட வழக்கறிஞர்கள் (பார் அசோசியேசன்) ஏப்ரல் 9 அன்று பல குழுக்களாக ஊர்வலம் நடத்தினார்கள். அந்த போராட்டங்களில், ஊர்வலங்களில் தவறாமல் மூவர்னக் கொடியை அசைத்தபடி ஒழித்தது  “ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” கோஷம்.
கத்துவா வழக்கறிஞர்களின் கோரிக்கை சிபிஐ இதனை விசாரிக்க வேண்டும் என்பதே. மோடி ஆட்சியின் கீழ் சிபிஐ, வருமானவரி துறை மற்றும் இன்ன பிற துறைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது நாடு அறிந்ததே.
கடந்த மூன்று மாதங்களாக பாஜகவின் IT CELL இந்தியா முழுவதிலும் களமிறங்கி அசிபாவின் பலாத்காரத்தை கண்டிப்பது போலவும் அதே நேரத்தில் இந்த கயவர்களை காப்பாற்றும் செயலிலும் ஈடுபட்டது. அசிபா பலாத்காரத்தை கண்டித்தவர்கள் அனைவரையும் அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்தனர். அசிபா பலாத்காரம் பற்றி விரிவாக எழுதிய ஊடகங்களை “தேசவிரோத ஊடகங்கள்” என்று பட்டமளித்தனர்.
பாஜக கட்சியும் அதன் தலைவர்களும் அதன்  IT CELL-ம் ஏன் இத்தனை தூரம் சென்று இந்த விஷயத்தை மூடி மறைக்க முயலுகிறார்கள் என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம்…….
இந்த பலாத்காரத்தில் ஈடுப்பட்டவர்கள் எட்டு பேர் :-
இந்த பலாத்காரம் ஏன் இத்தனை துள்ளியமாக திட்டமிட்டு நடத்தப்பட்டது??  அசிபாவின் குடும்பத்தார் பக்கர்வால் சமூகத்தை சார்ந்தவர்கள். அந்த பள்ளதாக்கில் ஆடு மேய்ப்பது தான் பக்வர்வால் சமூகத்தின் தொழில்.  இந்த மேய்யசல் சமூகத்தை  அந்த பகுதியில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே அங்குள்ள இந்து வெறியர்களின் நோக்கம். இந்த கிராமத்தில் இருக்கும் இந்துக்கள் யாரும் இவர்களின் ஆடுகளுக்கு மேய்ய்சல் உரிமை அளிக்க கூடாது, ஏரிகள்-குளங்களில் கூட ஆடுகளை நீர் அருந்த அனுமதிக்க கூடாது என்பதாக பல கட்டுப்பாடுகளை சஞ்சி ராம் விதித்து வந்தார். சஞ்சி ராம் இந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரி. இவர் தான் இந்த சமூகத்தை விரட்ட வேண்டும் என்றால் அவர்கள் அதிர்ச்சியாகும் படியாக ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று திட்டமிடுகிறார். அவரது உறவினரான கோவில் நிர்வாகியை அழைத்து ஒரு காவல்துறை அதிகாரியின் துணையுடம் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார். தொடர்ந்து ஒரு வாரம் அவளை மயக்க மருந்துகள் கொடுத்து சுயநினைவு வரும் பொழுதெல்லாம் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
இந்த பலாத்காரம் நடைபெறுவதற்கு மூன்று தினங்கள் முன்னரே தீபக் மற்றும் விகரம் அருகாமையில் இருந்த ஒரு மருந்து கடைக்கு சென்று EPITIRIL 0.5mg மயக்க மருந்தை வாங்கினார்கள்.
அசிபா கடத்தப்பட்டு ஒரு இந்து கோவிலில் வைத்து தான் தொடர்ந்து பல நாட்கள் பலாத்காரம் செய்யப்பட்டார், அந்த கோவிலை பராமரிக்கும் நிர்வாகி இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
மனு என்பவன் அசிபாவை அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் சிலை முன்பே பலாத்காரம் செய்திருக்கிறான்.  இந்த வழக்கை விசாரித்து அசிபாவை தேடிச்  சென்ற காவல்துறை அதிகாரி (SPO)யும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
உத்திர பிரதேசத்தின் மீரட் நகரத்தில் இயங்கும் விஷால் என்கிற ஹிந்த்துவா தொண்டர் ஜனவரி 12 அன்று அசிபாவை பலாத்காரம் செய்யவே ஜம்முவுக்கு வந்து சேர்ந்தார்.
உணவேதும் கொடுக்காமல் வெறும் வயிற்றில் மூன்று மயக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் கொடுத்து கொடுத்து தான் பலாத்காரம் செய்தார்கள்.
கடைசியாக அசிபா மீது பெரிய பாறாங்கல்லை தூக்கிபோட்டு அவளை சிதைப்பதற்கு முன்னால், தான் ஒரு முறை புணர வேண்டும் என்று காவல்துறை அதிகாரி (SPO) கஜுரியா விருப்பட்டார், அவரது விருப்பமும் நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை அதிகாரி (SPO) பலாத்காரம் செய்தவுடன் முதலில் அவள் முதுகில் தனது கால்முட்டியை வைத்து அவளது முதுகெலும்பை உடைத்திருக்கிறார் தன் பின்னர் இரு முறை அவள் மீது பாறாங்கற்கள் வீசப்பட்டு அவள் இறந்துவிட்டாலா என்று உறுதி செய்தனர்.
இந்த விசாரனையை நடத்திய அதிகாரி ஆனந்த தத்தா, பின்னர் இவர்களிடம் மூன்று லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மொத்த சம்பவத்தையே மூடி மறைக்க முயன்றார். அசிபா அணிந்திருந்த உடைகளில் இருந்த கறைகளை எல்லாம் நீக்க, அவளது உடைகளை எல்லாம் துவைத்து அசிபாவின் சடலத்திற்கு மாட்டிவிட்டார் விசாரனை அதிகாரி ஆனந்த தத்தா. அவரை சேர்ந்த்து இந்த கொடூரச் செயலை செய்த எட்டு பேரும் இந்துக்கள்.
அசிபாவின் சடலத்தை கூட அவள் வாழ்ந்த கிராமத்தில் அடக்கம் செய்ய இந்த வெறியகள் அனுமதிக்கவில்லை, அவளது கிராமத்தில் இருந்து 10 கிமி தொலைவில் மற்றொரு கிராமத்தில் தான் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அசிபாவை காணவில்லை என்று முதலில் அவளது பெற்றோர் காவ்ல நிலையத்தில் புகார் அளித்த போது, அங்கிருந்த காவல்துறை அதிகாரி உன் எட்டு வயது மகள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள் என்று சொன்னானாம். இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இன்னும் பல அதிர்ச்சியான விசயங்களை வெளிக் கொண்டுவந்ததுள்ளது.
அசிபாவின் வலியை நாம் எப்படி இந்த சமூகத்திற்கு கடத்தப் போகிறோம், இந்த வலியை எப்படி இந்த தேசம் உணரப் போகிறது.
 #justiceforasifa ஹேஷ்டேக்கை மீண்டும் ஒரு முறை பதிவிடுங்கள்…

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!