இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை வைஸ் அட்மீரல் கரம்பீர் சிங் ஆய்வு.

இந்திய கடல்பகுதியில் இலங்கை கடற்படையினர் ஊடுருவல் இல்லை என்றும் பாக்ஜலசந்தி  மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படையினர் ஈடுபட்டுவருவதா வைஸ் அட்மீரல் கரம்பீர்சிங்  தகவல்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் கடல்பகுதியில் இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங் ஆய்வு மேற்கொன்டார். இந்திய கடற்பகுதிக்குள் இலங்கை கடற்படையினரின் ஊடுருவல் இல்லை எனத் தெரிவித்த அவர்  இந்திய மீனவர்கள் எல்லைதாண்டுவதை தவிர்க்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில மாதங்களாக இராமேஸ்வரம் தீவு மற்றும் மண்டபம் வேதாளை துறைமுகப் பகுதியிலிருந்தும் இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதும் இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவதும் அதிகரித்துள்ள நிலையில் இன்று இராமேஸ்வரம் வந்த இந்திய கடற்படை வைஸ் அட்மீரல் கரம்பீர்சிங் இராமேஸ்வரம் கடற்படைமுகாமில் ஆய்வு நடத்தினார்.

பின் செய்தியாளாகளிடம் பேசிய அவர் :  இந்தியகடல் பிராந்தியத்தில் இலங்கை கடற்படையினர் ஊடுருவல் இல்லை மேலும் இந்திய (தமிழக ) மீனவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் அத்துமீறுவதை தவிர்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் மீனவர்கள் எல்லைதாண்டிச் சென்று மீன்பிடிப்பதை தடுக்க நடவடிக்கைகள்  மெற்கொள்ளப் பட்டுவருதாக தெரிவத்தார்.

பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடா கடல் பிராந்தியங்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இந்திய கடற்படையினர்கள்  ஈடுபட்டுவருவதாக கூறினார். மேலும் இராமேஸ்வரம் பாதுகாப்பில் மிக முக்கிய இடமாக இருப்பதால் இராமேஸ்வரம்  கடற்படைத்தளத்தை விரிவு படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.