கேஸ் சிலிண்டர் வினியோக குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.03.2018) எரிவாயு உருளை விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி (D R O) முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயலாளர் சட்டப் போராளி முகைதீன் இப்ராகீம், கீழக்கரை சட்ட போராளிகள் தளத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முகம்மது சாலிஹ் ஹூசைன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்தனர். கேஸ் சிலிண்டர் வினியோக குறைகளை கேட்டறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி, புகாரை மனுவாக அளிக்கும் படி சட்டப் போராளிகளை கேட்டு கொண்டார். அதனடிப்படையில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த புகார் மனுவில் ”கீழக்கரையில் தனியார் கேஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது, கள்ள மார்க்கெட்டில் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்வது, எடை குறைவான கேஸ் சிலிண்டர் வினியோகம், கேஸ் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு உரிய முறையில் சிலிண்டர்களை உடனடியாக விநியோகிக்காமல் இருப்பது, காலாவதியான கேஸ் சிலிண்டர் உருளைகளை வாடிக்கையாளர்களின் உயிருக்கு ஊரு விளைவிக்கும் வகையில் வினியோகிப்பது,

பொதுமக்கள் பள்ளி மாணக்கர்கள் நடமாடும் பகுதிகளில் எரிவாயு உருளைகளை பாதுகாப்பு இன்றி வைத்து விநியோகம் செய்வது” உள்ளிட்ட பிரச்சனைகள்  சம்பந்தமாக புகார் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி (D R O) முத்துமாரி விரைவில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..