18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது..

கீழக்கரை சாலை தெருவை சேர்ந்த சகோதரர்களால் துவங்கப்பட்ட 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்வி உதவிகள், மக்கள் சேவைகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சப்தமில்லாமல் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

இந்த அறக்கட்டளைக்கான புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (18-09-2017) மாலை 7 மணியளவில் 18 வாலிபர்கள் தர்ஹா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், அனைத்து ஜமாஅத் முக்கிய பிரமுகர்கள், சாலை தெரு பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

1 Comment

Comments are closed.