குப்பை தொட்டிகளால் சுகாதாரம் மேம்படுமா அல்லது குப்பை மேடாகுமா??..குப்பை இல்லா நகராய் மாறுமோ கீழக்கரை ?..

கீழக்கரை நகராட்சியில் சுமார் 50, 000 பேருக்கும் மேல் வசிக்கிறார்கள். அதில் நகராட்சி, மின்சார வாரியம், காவல் நிலையம் மத்திய அரசின் தொலைபேசி அலுவலகம், தபால்துறை போன்ற அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதன் பயன்பாட்டிற்காக உள்ளூர் ஆட்கள் தவிர்த்து வெளியூர் ஆட்களும் பல நூறு பேர் தினமும் வந்து செல்கின்றனர். இரண்டு வருடமாக கீழக்கரைக்கு புதிதாக தாலூகா அலுவலகம் வரப்பெற்று இன்னும் அதிகமாக வெளியூரிலிருந்து ஆட்கள் வருகின்றனர்.

கீழக்கரை நகர் கழிவு மேலான்மையில் பின்தங்கியிருக்கிறது என்பதை கசப்பான உண்மைதான். காரணம் நகராட்சி மூலமாக குப்பை தொட்டிகள் வைத்தாலும் பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. அதற்கு மேல் அவ்வாறு வைக்கும் தொட்டிகளை நகராட்சியும் முறையாக நீக்ககவதும் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். ஆனால் சமீப காலமாக வெளியூரில் இருந்து கீழக்கரைக்கு அரசாங்க வேலை நிமித்தமாக வேலைக்கு வரக்கூடியவர்களால் சேரும் குப்பையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போதைய சூழலில் வெல்பர் அசோசியசன் மூலம் வீடுகளில் குப்பை எடுக்கப்பட்டாலும் வெல்பர் ஆட்களை தவற விட்டாலோ, வரும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் சேரும் குப்பைகளை வீதிகளில் வீசூம் அவலம்தான் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

இக் குறையை நீக்கும் பொருட்டு நகராட்சி நிர்வாகம் அதிக இடங்களில் அதிகப்படியான குப்பை சேகரிக்கும் பெட்டி அமைக்கை முயற்சிகள் எடுத்து வருகிறது. அதுபோலவே அதிகமாக குப்பை சேகரிக்கும் இடங்களில் இரண்டு பெட்டிகள் வைக்கவும், பெட்டி வைத்த இடங்களில் தினந்தோறும் அதை எடுக்கவும், குப்பை சேர்ந்த நிலையில் உள்ளதா என அடிக்கடி கண்காணிக்க ஆட்களை நியமித்து, மற்ற ஊர்களில் உள்ளது போல் நமதூரிலும் நவீனவாகனங்கள் மூலம் உடன் அப்புறப்படுத்தவும் வள்ளல் சீதக்காதி சாலையான மெயின் ரோட்டை சுத்தமாக வைக்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நகராட்சி நிர்வாகமும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் குப்பை தொட்டியில் போடப்படும் குப்பைகள் உடனடியாக நகராட்சி சுத்தப்படுத்தும் என்ற நம்பிக்கையையும் உண்டாக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களும் அதிக இடங்களில் குப்பை சேகரிக்கும் பெட்டிகளை வைப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இக்கோரிக்கையை மக்கள் டீம் காதரும் பொதுமக்கள் சார்பாக கீழக்கரை நகராட்சிக்கு வைத்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..