Home செய்திகள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக தீ தடுப்பு மற்றும் மீட்பு செயல் முறை பயிற்சி…

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக தீ தடுப்பு மற்றும் மீட்பு செயல் முறை பயிற்சி…

by ஆசிரியர்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பாக 22.08.2017 அன்று கீழ்க்கரை தாசிம் பீவீ அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு யூத் ரெட் கிராஸ், என்.எஸ்.எஸ். மற்றும் ரெட் ரிப்பன் கிளப் மாணவியர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் செயல்முறைப் விளக்க பயிற்சியினைராமநாதபுரம் தீ அணைப்பு மற்றும் மீட்பு சேவை துறையினர்வழங்கினர்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் சுமையா தலைமையில் வணிகவியல் துறை தலைவர் முனைவர் திருமதி A.E.G.C.ரஜினி ரெட் கிராஸ் புரவலர் T. முனியசங்கர் ஆகியோர் முன்னிலையில் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் எஸ். ஹாரூன் கருத்தரங்கிணை துவக்கி வைத்தார் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி ஏ. ஜெஸ்மின் வரவேற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட தீ அணைப்பு மற்றும் மீட்பு சேவை அலுவலர் கே. முரளி ஆலோசனைப்படி தீ அணைப்பு நிலைய அதிகாரி நாகராஜன் உதவி அதிகாரி எஸ். ராஜேந்திரன் தலைமையில் முன்னணி தீ அணைப்பு விரர்கள் எஸ்.பாலமுத்துக்குமார், பி.அருண்குமார், உ. அமீர் ஆனந்தன் து மாடசாமி ஆகியோர் தீ தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி செயல்முறை விளக்கமளித்தனர். ( தீ யின் வகைகள் தீயை அணைக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தீயை அணைக்க உபயோகப்படுத்த வேண்டிய கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் தீக்காயம் அடைந்தவரை காப்பாற்றும் முறைகள், காப்பாற்றச் செல்லுவோர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் )

நிகழ்வில் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் துணைத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் பொருளாளர் சி.குணசேகரன் புரவலர் கீழக்கரை அப்பா மெடிக்கல்ஸ் எஸ். சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு தீ அணைப்பு மற்றும் மீட்பு சேவை துறையினரின் முக்கிய செயல்பாடுகளை விளக்கினார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் திருமதி வி. அகிலா நன்றி கூறினார்

ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் இப்பயிற்சிக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அதே போல் கீழ்க்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியிலும் தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் செயல்முறை பயிற்சியினை தீ அணைப்பு மற்றும் மீட்பு சேவை துறையினர் வழங்கினர். கல்லூரியின் முதல்வர்முனைவர் ஏ. அலாவுதீன் தலைமையில் ரெட் கிராஸ் புரவலர்கள் கீழக்கரை எஸ். சுந்தரம் மற்றும் டி. முனியசங்கர்மற்றும் துணை முதல்வர்கள் முன்னிலையில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் துவக்கி வைத்தார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!