கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமின் துவக்க விழா…

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் பல்வேறு துறைகள் சார்பாக இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு மூன்று நாட்கள் நடைபெற உள்ள “வேலைவாய்ப்பு” பயிற்சி முகாமின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர்எஸ்.எம்.யுசுப் சாகிப், கல்லூரியின் இயக்குநர் எஸ்.ஏ.ஹமீது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர்.அலாவுதீன் பயிற்சி முகாமை துவக்கி வைத்துப் பேசினார்.

வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.மரியதாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்றிப்பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரின் அனைத்து துறைத்தலைவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகேந்திரா ப்ரைடு ஸ்கூல் (MAHINDRA PRIDE SCHOOL) நிறுவனத்தின் பயிற்சியாளர் எஸ்.முரளிதரன் சிறப்புரையாற்றினார்.

கல்லூரியின் துணைமுதல்வர்கள் அ.சேக்தாவூது, தஎன்.இராஜேந்திரன், அமைப்பியல்துறை துறைத்தலைவர் ஏ.செந்தில்ராஜன் மற்றும் இயந்திரவியல்துறை துறைத்தலைவர் ஜெ.கணேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமிற்கு சென்னையைச் சேர்ந்த மகேந்திரா ப்ரைடு ஸ்கூல் (MAHINDRA PRIDE SCHOOL) என்ற நிறுவனத்தின் மேலாளர் ஆனந்திஅரவிந்த் மற்றும் பயிற்சியாளர்கள் எஸ்.முரளிதரன், டீ.ஜெயக்குமார், எஸ்.எல்.பிரிட்டோ மற்றும் ஏ.கௌதம் சங்கர் குழுவினர் இறுதியாண்டு பயிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளுதல் தன்நம்பிக்கை வளர்த்துகொள்ளுதல், இலக்கு நிர்ணயித்தல், ஆளுமைதிறன், பேச்சுத்திறன் வளர்த்தல்,தனிநபர் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி விளக்கி சிறப்பு வகுப்புகள் நடத்தினார்கள்.

இதில் இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், அமைப்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை, கப்பல்துறை மற்றும் கனிணித்துறை (Mechanical,Civil, EEE, ECE, Marine & CT ) மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

​இந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாமிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மகேந்திரா ப்ரைடு ஸ்கூல்நிறுவனமும், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து செய்திருந்தனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image