கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இளைஞர் எழுச்சி தினம்….

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 11.08.2017 அன்று காலை 11.00 மணியளவில் தமிழ்த்துறை தாசிம் பீவி தமிழ் மன்றத்தின் சார்பாக இளைஞர் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் அகிலா தமிழ்த்தறைத் தலைவர் வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக எஸ் செல்லம், ஒருங்கிணைப்பாளர், விவேகானந்தா ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி கலந்து கொண்டு இளைஞர்களின் சட்டப்பூர்வ அதிகாரம் என்ற தலைப்பில் விவேகானந்தர் வரிகளின்படி ” நீ என்னவாக ஆக விரும்புகிறாயோ அதையே ஆவாய்” என்றும் பெண்கல்வி சிந்தனை சாதனையாளர்கள் பற்றியும் மாற்றமும் முன்னேற்றமும் ஒவ்வொருவருக்கும் தேவை என்றும் உரையாற்றினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தார்கள். இரா.விசாலாட்சி உதவிப்பேராசிரியை தமிழ்த்துறை அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.


புனித ரமலான் வாழ்த்துக்கள்..