Home செய்திகள் இந்த வருடமாவது கீழக்கரையில் வெளிச்சத்துடன் விடியுமா பெருநாள்..

இந்த வருடமாவது கீழக்கரையில் வெளிச்சத்துடன் விடியுமா பெருநாள்..

by ஆசிரியர்

கீழக்கரையில் ஒவ்வொரு பெருநாள் தொடங்கும் முன்பும் மக்கள் மனதில் பெருநாள் கொண்டாடும் சந்தோசத்தை விட பெருநாள் இரவு மின்சாரம் இருக்குமா என்ற கவலைதான் அதிகமாக இருக்கும.  அதற்கு இந்த வருடமும் விதி விலக்கு இல்லை. நோன்பு தொடங்கியது முதல் பல காரணங்கள் கூறி அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் தொடங்கி விட்டன.

நோன்பு தொடங்கியது முதல் பராமரிப்பு என்று கூறி ஒரு நாள்,  டிரான்ஸ்ஃபார்மர் மாற்றம் என்று ஒரு நாள் , திடீர் பராமரிப்பு என்று ஒரு நாள் அதையும் மீறி தினமும் அறிவிக்கப்படாத பல மணி நேர மின் வெட்டு.  இச்சம்பவம் கீழக்கரை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இது சம்பந்தமாக தமுமுக, எஸ்டிபிஐ போன்ற சமூக அமைப்புகளும் கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் மின்சார வாரியத்தின் மீது பதிந்து மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர். மாதம்தோறும் பாரமரிப்பு என்ற காரணத்துடன் மின்வெட்டு ஏற்படுவதே இது போன்ற முக்கியமான விஷேசு காலங்கிளல் மக்களுக்கு எந்த சிரமும் ஏற்படாமல் மின்சார வசதி செய்து கொடுப்பதுதான். 

மேலும் கடந்த வருடங்களில் கீழக்கரை மின் நிலையத்தில் பல சீரமைப்பு பணிகளும் பல புதிய டிரான்ஸ்பார்மர்களும் பொருத்தப்பட்டுள்ளன.  அதையும் மீறி இதுபோன்ற மின் வெட்டுகள் ஏற்படுவது மக்களிடம் பெரும அதிருப்தியையும் மின்சார வாரியம் சிறுபான்மையினரின் விஷேச காலங்களில் இது போன்ற காரியங்கள் திட்டமிட்டே செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.  மின்சார வாரியம் மக்களின் அச்சத்தையும் சந்தேகத்தையும் இந்த வருடமாவது தடையில்லாத மின்சாரம் மூலம் போக்குமா??

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!