கீழக்கரையில் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கிய திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு பணி…

கீழக்கரை நகராட்சி சார்பாக இன்று (21-06-2017) திடக்கழிவு மேலான்மை விழிப்புணர்வு (Solid Waste Managment Awareness) பணிகள் உறுதிமொழி மற்றும் கவிதையுடன் தொடங்கியது. இப்பணிகள் இன்று கீழக்கரை அன்பு நகர் பகுதியில் சுமார் 172 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுக்கும் குப்பைகளை கையாள்வது மற்றும் எவ்வகையான குப்பைகளை பிரித்து நகராட்சி வழங்கியுள்ள ப்ளாஸ்டிக் வாளிகளில் போடுவது என்ற செய்முறை விளக்கங்கள் நகராட்சி ஊழியர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

பின்னர் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவி/தலைவர்களிடம் சுகாதாரம் பேணுவது பற்றிய “முழு சுகாதார தமிழகம்-தூய்மை இந்தியா இயக்கம்” உறுதி மொழி பத்திரமும் நகராட்சி ஊழியர்களால் கையெழுத்துடன் பெறப்பட்டது.

நகராட்சி வெளியிட்ட கவிதை:-

காலை ஆறு மணிக்கு எழுந்து பார்…
சிறிது தூரம் நடந்து பழகு…
உலகம் புதிதாக தோன்றும்..
பறவைகளின் கீச்சொலியைக் கேட்பாய்..
நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் சீரிய பணியைக் காண்பாய்…
இனி குப்பையை தெருவில் வீசாமல்
குப்பை தொட்டியில் இட நினைப்பாய்…
உன் வீட்டைப் பெருக்கி கால்வாயில் தள்ளுவதை தவிர்க்க எண்ணுவாய் ….
நல்லதை நினைப்பாய் …
வீடு சுத்தமாவதை மட்டும் எண்ணிய நீ ஊர் சுத்தம் பேண நினைப்பாய்…
உனக்கு அறுவறுப்பாக தோன்றிய துப்பரவுப் பணியாளர்கள்சுகாதாரத்தின் தூதர்களாய் காண்பாய்…..
குடிநீர் வழங்க நகராட்சி பணியாளர்களின்
உழைப்பைக் காண்பாய்…
எளிமையாக தோன்றிய நகராட்சியின் பணி இனிமையாகத் தோன்றும்….
டெங்கு கொசு ஒழிப்பு பணியில் உன் வீடு
தேடி வரும் பணியாளரை மதிப்பாய்….
நீ நன்றாக செல்ல சாலை அமைத்து உன் வீட்டு கழிவு நீர் செல்லும் கால்வாய் அமைத்து அதை சுத்தம் செய்யும் பணியாளரை மதிப்பாய்…
நல்லதை நினை நல்லதே நடக்கும்…