கீழக்கரையில் பல பகுதிகளில் நோன்பு கால சஹர் உணவு ஏற்பாடு..

புனிதமான ரமலான் மாதம் தொடங்கியது முதல் பெரியவர் முதல் சிறியவர் வரை நன்மைகளை கொள்ளையடிப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பல நன்மையான காரியங்களை செய்து வருகிறார்கள்.

இந்த புனித மாதத்தில் வீண் விரயம் பலரால் செய்யப்பட்டாலும், மற்றொரு புறம் இரவு நேரங்களில் நோன்பு வைப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவு கிடைப்பதற்கும் சிரம்ப்படும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.  அவர்களுக்கும் நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனேகமான தெருக்களில் ஜமாஅத் மூலமாகவும், சமூக அமைப்புகள் மூலமாகவும், இயக்கங்கள் மூலமாகவும் தினமும் பல்வேறு தெருக்களில் சஹர் உணவு தயார் செய்யப்பட்டு இரவு நேரங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று (21-06-2017) புது கிழக்குத் தெரு மற்றும் 500 ப்ளாட் பகுதி சகோதரர்களால் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அதே போல் நடுத்தெரு பள்ளியிலும் சஹர் உணவு விருந்து நடைபெற்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..