Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கவிக்கோ அப்துர் ரஹ்மான் புனித ரமலான் மாதத்தில் இறைவனடி சேர்ந்தார் ..

கவிக்கோ அப்துர் ரஹ்மான் புனித ரமலான் மாதத்தில் இறைவனடி சேர்ந்தார் ..

by ஆசிரியர்
தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஓருவரான கவிக்கோ அப்துர்ரஹ்மான் திடீர் மறைவு. அவருடைய மறைவு நிச்சயமாக இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்றே கூறலாம். கவிக்கோ உடல்நலக்குறைவால் இன்று (02-06-17) இன்று காலமானார்.
கவிக்கோ பற்றிய வாழ்கை குறிப்பு..

அப்துல் ரகுமான் ,(பிறப்பு: நவம்பர் 9, 1937), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!