Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் அபாயம் – உபரி நீர் மற்றும் மழை நீர் சேகரிப்பில் மக்கள் கவனம் செலுத்துவார்களா??

கீழக்கரையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் அபாயம் – உபரி நீர் மற்றும் மழை நீர் சேகரிப்பில் மக்கள் கவனம் செலுத்துவார்களா??

by Mohamed

தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. அந்த பட்டியலில் கடலோர பகுதியான கீர்த்தி மிகு கீழக்கரையும் மிக அபாயகரமான நிலையில் உள்ளது.  கடந்த ஐந்து வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

பருவ மழை பொய்த்து விவசாயம் அழிந்து வரும் நிலையில் நீர் நிலைகள் பராமரிப்பு இன்றி அழிக்கப்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் என்று சொல்லும் வகையில் விவசாய நிலங்கள் பிளாட்களாக மாறி வருவதாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் முறையான நீர் சேமிப்பு முறை கடைபிடிக்காததாலும் தண்ணீர் பஞ்சம் மக்களை தத்தளிக்க வைக்கிறது.

அது போல் கீழக்கரையிலும் மழை நீர் சேகரிப்பு போன்ற விசயங்களில் கவனம் செலுத்தாதால் இன்று நிலத்தடி நீர் மட்டம் கவலை கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது.  பூமிக்கு செல்ல வேண்டிய நீர், சரியான வழிமுறை இல்லாததால் கடலில் சென்று கலக்கிறது.  இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணற்றில் நீர் மட்டம் குறைய தொடங்கிவிட்டது.

கீழக்கரை சுற்றுவட்டாரங்களில் முன்பு 14 உரைகளில், அதாவது 28 அடிகளில் கிடைக்கும் கிணற்று நீர் தற்போது 19 உரைகளில், அதாவது 38 அடி ஆழத்தில் கிடைக்கும் நிலை. சில நேரங்களில் 20 உரைகளுக்கு மேல் கிணறு தோண்டுவது சிரம் என்பதால் ஆள்துழை போட்டு தண்ணீரை பெறக்கூடிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்..

கீழக்கரையில் மேட்டு பகுதிகளில் அமைந்து இருக்கும் வடக்குத் தெரு, தெற்குத் தெரு, புதுத் தெரு பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கிணற்றில் போதிய நீர் இல்லாததால் பல அடிகளுக்கு துவாரம் (Bore) போட்டு தண்ணீரை பெற வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. மேலும் குடி நீரை விலை கொடுத்து வாங்குவது போல் சாதாரண வீட்டு உபயோக நீரையும் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இந்நிலை தொடருமானால் குடி நீரை விலைக்கு வாங்க குடங்களோடு ரோட்டில் லாரிக்காக காத்து இருப்பது போல் சாதாரண வீட்டு உபயோக நீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலை உருவாகி விடும் என்று பொது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள்.

மக்கள் தொகை பெருக்கமும் நீர் தட்டுப்பாட்டிற்கு ஒரு காரணியாக இருந்தாலும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையான மழை நீர் சேகரிப்பு போன்ற செயல்பாடுகளை அரசாங்கம் முழுவீச்சில் ஊக்கப்படுத்தாத காரணத்தாலும், அதுபற்றிய போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததும், வீண விரயம் செய்தல் போன்றவையும் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதனை சரி செய்வதன் மூலம் மழை பொய்த்து போனாலும் நீலத்தடி நீர் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது..

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அனைத்து வகையான முயற்சிகளை மேற்கொண்டால் தண்ணீர் தட்டுபாட்டை சமாளிக்க முடியும் என்று சுற்று புறச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!