என்று தானாக விழிக்கும் கீழக்கரை நகராட்சி???..

கீழக்கரை நகராட்சியை பொறுத்த வரை நகராட்சி செய்யும் சுகாதார பணிகளை காட்டிலும் சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் செய்யும் பணிகளே அதிகம் என்றால் மிகையாது. அதுவே நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்திற்கு காரணமாகி விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

கீழை நகரை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்வதும், சுகாதாரமான வைத்துக் கொள்வதும் நகராட்சியின் கடமையாகும், ஆனால் அதிகமான பகுதிகளில் ஊழியர்களை அழைத்து சுத்தம் செய்யக் கூறினால் மட்டுமே பணிகள் நடக்கின்றது. அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் குப்பைகளின் மேடாகி சுகாதாரக் கேடுகள் விளைவிக்கும் நிலைக்கு அந்த பகுதிகள் மாறி விடுகிறது.

இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுத்து, நிரந்தர சுகாதரம் பேண வழி வகுக்குமா?? நாம் இங்கே பதிந்திருக்கும் புகைப்படங்கள் சாலைத் தெரு கோயில் உள்ள சந்தில் குவிந்து வரும் குப்பைகள், இது ஒரு சிறு உதாரணம், இது போன்ற குப்பை குவியல்களை கிழக்கரையில் பல இடங்களில் காண முடியும்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..