Home அறிவிப்புகள்அரசு அறிவிப்பு TNPSC குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

TNPSC குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு – இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

by keelai

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, நேற்று 27.04.2017 வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953

தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப்பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

(i) உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு / இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(ii) நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.05.2017

தேர்வு நாள் – 06.08.2017

தேர்வு மையங்களின் எண்ணிக்கை – 116

விண்ணப்பிக்கும் முறை :

பின் வரும் ஏதேனுமொரு லிங்கினை சொடுக்கி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்

http://www.tnpsc.gov.in

http://www.tnpscexams.net

http://www.tnpscexams.in

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று / இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கெனவே சமர்ப்பித்த விண்ணப்பங்களுக்கு பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக இத்தேர்வுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மீது விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.

மேற்கூறிய காரணங்களால், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குத் தேர்வாணையம் பொறுப்பாகாது.

விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!