கீழக்கரையில் அறிவிக்கப்படாத மின் வெட்டு.. மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை..

கோடைகாலம் ஆரம்பித்தவுடன் மின்வெட்டு பயமும் மக்கள் மனதில் தொற்றி கொள்கிறது. இந்த பயம் கடந்த வருடம் கொஞ்சம் குறைவாக இருந்தது, ஆனால் இந்த வருடம் அதிகரித்து விட்டது.

கீழக்கரையில் இன்று காலை 11 மணி முதல் அறிவிக்கப்படாத மின் வெட்டு தொடங்கிவிட்டது. கடுமையான கோடை காலத்தில் இதுபோன்ற உச்சி வெயில் நேரத்தில் மின் தடை செய்வது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது, மேலும் நோயாளிகள் மற்றும் வயோதிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த மின்வெட்டு இனி காலை மற்றும் மாலை இரண்டு நேரமும் தொடரும் என்றே மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தக் கடுமையான கோடை காலத்தில் மின் வெட்டு அமல்படுத்துவதாக இருந்தால் கடுமையான வெயில் தொடங்குமுன் அல்லது வெப்பம் குறைந்த பின்பு மின்வெட்டு அமல்படுத்தினால் முதியவர்களும், நோயாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த காலங்களில் மின் பற்றாக்குறையினால் மின் வெட்டு ஏற்பட்டது, ஆனால் தற்சமயம் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு காரணமோ, அரசாங்கத்தின் மெத்தனப்போக்காலும், மோசமான நிதி மேலான்மையினாலுமே ஏற்பட்டுள்ளது என்பதே வேதனையான விசயம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..