வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கேபிள் டிவி நிறுவனத்தில் உள்ள நிரந்தர ஆதார் சேவை மையங்களில் அனைத்து இ-சேவைகளையும் பெறலாம்..

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 8 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த அறிவிப்பை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர்.நடராஜன் வெளியிட்டுள்ளார்.

​ஆதார் பதிவு செய்வதற்கு 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்வதற்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்கு ரூ.25ம், புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25ம், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கு ரூ.10ஃ-ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளரிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் கட்டணமில்லா தொலைபேசி எண். 1800 425 2911-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ​ மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..