கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக தண்ணீர் பந்தல்..

தமிழகத்தில் சித்திரை வெயில் எங்கும் கொளுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கிறது. தென் மாநிலமான இராமநாதபுரம் மாவட்டம் கடுமையான வெப்பத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது.

மக்களின் தாகத்தைப் போக்க தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மக்களின் தாகத்தை போக்கும் வண்ணம் மோர் பந்தல் அமைத்து நீர், நீர்மோர் மற்றும் பழரச பானங்கள் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இன்று கீழக்கரை SDPI கட்சி, வள்ளல் சீதக்காதி மற்றும் முஸ்லிம் பஜார் சாலை சந்திப்பில் நீர் பந்தல் அமைத்து மக்கள் தாகம் தீர்த்து வருகிறார்கள்.

இப்பந்தலை நகர் தலைவர்.குதுபு ஜமான் மற்றும் நகர் செயலாளர். கீழை அஸ்ரப் தலைமையில் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யபட்டு செய்யது முஹம்மது என்ற அஸ்கர் திறந்து வைத்தார். இந்த மோர் பந்தல் ஒருங்கிணைப்பினை தெற்கு கிளை நிர்வாகிகள்.காதர் மற்றும் நெய்னா மற்றும் தொகுதி இணைச் செயலாளர்.சித்திக் ஆகியோர் செய்தனர்.

இந்த மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் இணைச் செயலாளர்.இபுனு முஹைதீன் மற்றும் இணைச் செயலாளர் முர்சலீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரர்களும் SDPI கட்சியின் வடக்கு கிளைத்தலைவர் நதீர் மற்றும் செயலாளர் நிஜாமுதீன் மற்றும் கிழக்கு கிளை செயலாளர் ரசீது அவர்கள் மற்றும் மேற்கு கிழைப் பொருளார் பாசித் மற்றும் SDTU தொழிற்சங்கம் தலைவர் அருள் மற்றும் செயலாளர் ராசிது மற்றும் பொருளாளர்.ஹபீப் மற்றும் நகர மற்றும் கிளைகளின் செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..